Friday, 27 November 2026
கனடா வானிலை
3°C
ரொறன்ரோ
தூறல்
  • உணர்வு -2°
  • ஈரப்பதம் 95%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 2°
  • மார்க்கம் 2°
  • பிரம்டன் 1°
  • மிசிசாகா 2°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▲ 0.09%
  • EUR 1.56 ▲ 0.16%
  • GBP 1.87 ▲ 0.15%
  • CHF 1.71 ▼ 0.28%
  • AUD 0.94 ▲ 0.52%
  • 1 CAD → LKR 233.53 ▲ 0.10%
  • 1 CAD → INR 64.92 ▲ 0.21%
  • AED 0.39 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-11-27 07:18
அண்மைச் செய்திகள்
“ChatGPT-யிடம் போய்விடுவேன் என மிரட்டிய பயனருக்கு Claude AI கொடுத்த அதிர்ச்சி பதிலடி!” இன்றைய ராசிபலன் – நவம்பர் 27, 2026 வெள்ளி இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப் பயிற்சி ‘மித்ர சக்தி – XII’ வெற்றிகரமாக நிறைவு! இந்த வருடத்தில் தமிழ் சினிமாவைக் காப்பாற்றிய 5 திரைப்படங்கள்: வெளியான பட்டியல்! இலங்கை ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி தோல்வி – ஹர்ஷா போக்லே வெளியிட்ட எச்சரிக்கை! மத்திய கிழக்கில் பதற்றம்; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு! தென்கிழக்காசியாவின் 4 நாடுகளுக்கு அதிநவீன AI சிப் விற்பனையை இடைநிறுத்திய என்விடியா! அமேசன் காட்டில் 11 நாட்களாக காணாமல் போயிருந்த 74 வயது முதியவர் உயிருடன் மீட்பு! தெற்காசியாவின் முக்கிய கிறிஸ்மஸ் கொண்டாட்ட மையமாக கொழும்பை மாற்றும் முயற்சி! கனடா Scarborough வில் தமிழீழத் தேசியக்கொடி நாள் சிறப்பாக நடைபெற்றது.
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம்; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.5 வீதத்தால் அதிகரித்து 94.61 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலை 2 வீதத்தால் அதிகரித்து 83.68 டொலராகவும் பதிவாகியுள்ளது.

ராஸ் தனூரா சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமாகவும் விளங்குவதால், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கிலிருந்து உலகச் சந்தைக்கான எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு எதிர்பார்த்த அளவை விடக் குறைவாக அதிகரித்தமையும் விலை உயர்வுக்குப் பங்களித்துள்ளது.

இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான மசகு எண்ணெய் உற்பத்திக் கொள்கையைத் தீர்மானிப்பதற்காக OPEC+ நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் சர்வதேச எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.