Thursday, 26 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -1°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 28 km/h
  • ஸ்காபரோ 6°
  • மார்க்கம் 6°
  • பிரம்டன் 5°
  • மிசிசாகா 5°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▼ 0.44%
  • EUR 1.56 ▼ 0.43%
  • GBP 1.86 ▼ 0.52%
  • CHF 1.71 ▲ 0.21%
  • AUD 0.94 ▼ 0.99%
  • 1 CAD → LKR 233.30 ▲ 0.42%
  • 1 CAD → INR 64.79 ▼ 0.13%
  • AED 0.39 ▼ 0.44%
புதுப்பிப்பு: 2026-11-26 17:23
அண்மைச் செய்திகள்
இலங்கையின் கறுவாவுக்கு முதலாவது தேசிய புவியியல் குறியீட்டுச் சான்றிதழ்! 43.5 விநாடிகளில் லிபர்ட்டி சிலையை வரைந்து உலக சாதனை படைத்த ஓவியர்! 500 ஆண்டுகள் கடலுக்கடியில் மறைந்திருந்த போர்க்கவசம் – ஆய்வாளர்கள் வியப்பு! பூமியிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் இருந்தாலும் தந்தையான நெகிழ்ச்சித் தருணம்! பூமிக்கு மேலே உருவாகும் AI உலகம்: ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி! மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம் கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை! 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Macy’s அணிவகுப்பு – சீரற்ற காலநிலையால் ஒத்திவைப்பு! இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் புதிய வீடுகள் – முதலமைச்சர் விஜய் தலைமையில் திறந்து வைப்பு பிரபல ரொக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞர் ஆண்டி டெய்லர் காலமானார்!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

இலங்கையின் கறுவாவுக்கு முதலாவது தேசிய புவியியல் குறியீட்டுச் சான்றிதழ்!

இலங்கை கறுவா (Ceylon Cinnamon) தேசிய புவியியல் குறியீட்டின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய, இலங்கை கறுவாவுக்கான நாட்டின் முதலாவது புவியியல் குறியீட்டுச் சான்றிதழை தேசிய அறிவுசார் சொத்துக்கள் அலுவலகம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு வழங்கியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, அரச மற்றும் தனியார் துறையினர் உள்ளிட்ட கறுவா உற்பத்தித் துறை சார்ந்த தரப்பினருடன் இணைந்து சுமார் ஒரு தசாப்த காலமாக முன்னெடுத்த திட்டத்தின் வெற்றியாக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி இலங்கை கறுவாவை புவியியல் குறியீட்டின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துப் பதிவு செய்திருந்தது.

இலங்கையின் தனித்துவமான பயிரான கறுவாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது உற்பத்திப் பொருளுக்கான புவியியல் குறியீடு இதுவாகும்.