அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற Macy’s நன்றி தெரிவிக்கும் நாள் அணிவகுப்பு (Thanksgiving Day Parade), சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தனது 100 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த அணிவகுப்பு, வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அதனை சனிக்கிழமை வரை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளதாக BBC சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரின் வானில் மிதந்து செல்லும் பிரமாண்டமான பலூன்கள் மற்றும் பிரபலமான கதாபாத்திரங்களின் உருவங்களில் வடிவமைக்கப்பட்ட பலூன்கள் இந்த அணிவகுப்பின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.







