Thursday, 26 November 2026
கனடா வானிலை
3°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -3°
  • ஈரப்பதம் 70%
  • காற்று 24 km/h
  • ஸ்காபரோ 1°
  • மார்க்கம் 2°
  • பிரம்டன் 1°
  • மிசிசாகா 2°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▼ 0.44%
  • EUR 1.56 ▼ 0.43%
  • GBP 1.86 ▼ 0.52%
  • CHF 1.71 ▲ 0.21%
  • AUD 0.94 ▼ 0.99%
  • 1 CAD → LKR 233.30 ▲ 0.42%
  • 1 CAD → INR 64.79 ▼ 0.13%
  • AED 0.39 ▼ 0.44%
புதுப்பிப்பு: 2026-11-26 14:23
அண்மைச் செய்திகள்
பூமிக்கு மேலே உருவாகும் AI உலகம்: ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி! மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம் கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை! 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Macy’s அணிவகுப்பு – சீரற்ற காலநிலையால் ஒத்திவைப்பு! இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் புதிய வீடுகள் – முதலமைச்சர் விஜய் தலைமையில் திறந்து வைப்பு பிரபல ரொக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞர் ஆண்டி டெய்லர் காலமானார்! 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீடு! – ஆட்சியில் சாதனை படைக்கும் தமிழக முதலமைச்சர் விஜய்! கொதிக்கும் புதன் கோளில் உறைந்த நீர் – ஆய்வுக்குத் தயாராகும் விண்கலம்! கிழக்கு கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா: 12 ஆயிரம் பாதிப்பு-6,000 பேர் உயிரிழப்பு எகிப்தில் எரிபொருள் தாங்கி விபத்து – 31 பேர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ‘ஹோப்’ (Hope) என்ற பெண் கழுதை, இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகிலேயே மிக நீளமான வாலைக் கொண்ட கழுதை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை ஹோப் படைத்துள்ளது.

ஜோர்ஜியா மாநிலத்தின் பைரன் நகரில் அமைந்துள்ள பண்ணையொன்றில் இந்தச் சாதனை அளவிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி கால்நடை மருத்துவர் குழு மற்றும் சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் ஹோப்பின் வால் அளவிடப்பட்டது.

இதன்போது, அதன் வால் 50.73 சென்டிமீற்றர் (19.97 அங்குலம்) நீளத்தைக் கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாத கால ஆய்வுக்குப் பின்னர் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.