Thursday, 26 November 2026
கனடா வானிலை
3°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -3°
  • ஈரப்பதம் 70%
  • காற்று 24 km/h
  • ஸ்காபரோ 1°
  • மார்க்கம் 2°
  • பிரம்டன் 1°
  • மிசிசாகா 2°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▼ 0.44%
  • EUR 1.56 ▼ 0.43%
  • GBP 1.86 ▼ 0.52%
  • CHF 1.71 ▲ 0.21%
  • AUD 0.94 ▼ 0.99%
  • 1 CAD → LKR 233.30 ▲ 0.42%
  • 1 CAD → INR 64.79 ▼ 0.13%
  • AED 0.39 ▼ 0.44%
புதுப்பிப்பு: 2026-11-26 14:23
அண்மைச் செய்திகள்
பூமிக்கு மேலே உருவாகும் AI உலகம்: ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி! மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம் கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை! 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Macy’s அணிவகுப்பு – சீரற்ற காலநிலையால் ஒத்திவைப்பு! இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் புதிய வீடுகள் – முதலமைச்சர் விஜய் தலைமையில் திறந்து வைப்பு பிரபல ரொக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞர் ஆண்டி டெய்லர் காலமானார்! 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீடு! – ஆட்சியில் சாதனை படைக்கும் தமிழக முதலமைச்சர் விஜய்! கொதிக்கும் புதன் கோளில் உறைந்த நீர் – ஆய்வுக்குத் தயாராகும் விண்கலம்! கிழக்கு கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா: 12 ஆயிரம் பாதிப்பு-6,000 பேர் உயிரிழப்பு எகிப்தில் எரிபொருள் தாங்கி விபத்து – 31 பேர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாக உருவாக்கப்பட்ட பாடல்களைத் தனது இசைச் சேவையிலிருந்து நீக்குவதற்கும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் இவ்வாறான புதிய பாடல்களைப் பதிவேற்றுவதைத் தடை செய்வதற்கும் டைடல் (Tidal) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தற்போது தளத்தில் உள்ள சுமார் 27 மில்லியன் பாடல்கள் நீக்கப்படவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இப்பணிகள் நிறைவடையும் போது நீக்கப்படும் பாடல்களின் எண்ணிக்கை 29 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் 80,000 முதல் 85,000 வரையிலான இவ்வாறான பாடல்களை நிராகரிக்க வேண்டியிருக்கும் என குறித்த நிறுவனத்தின் தலைவர் ரொபர்ட் அன்டர்சன் தெரிவித்துள்ளார்.

 ‘சுனோ’ மற்றும் ‘கூகுள் லிரியா’ போன்ற கருவிகளின் மூலம் முழுமையாக உருவாக்கப்படும் பாடல்களைக் கண்டறிய Ircam Amplify தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. 

எவ்வாறாயினும், செயற்கை நுண்ணறிவின் உதவியைப் பெற்று மனிதர்களின் படைப்பாற்றலுடன் உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு இந்த  தடை பொருந்தாது என குறித்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.