தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பதவியேற்ற முதல் 200 நாட்களுக்குள் சுமார் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.
இரண்டாவது ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்றத்திற்கான மாநாட்டில் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் , (58,214 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு நேற்று (25) கைச்சாத்திட்டுள்ளது.
இந்தப் புதிய ஒப்பந்தங்கள் ஊடாக மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 65,786 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான நிர்வாகம் இதுவரை 190 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இலத்திரனியல், குறைக்கடத்திகள், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இந்த முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன.
இந்தத் தரவுகள் முதலீட்டு உறுதிமொழிகளை மட்டுமே குறிப்பதாகவும், திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைப் பொறுத்தே உண்மையான முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







