உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய ரொக் இசைக்குழுவான ‘டுரான் டுரான்’ (Duran Duran) இன் கிட்டார் கலைஞர் ஆண்டி டெய்லர் தனது 65ஆவது வயதில் காலமானார்.
புரோஸ்டேட் புற்றுநோயுடன் நீண்டகாலமாகப் போராடி வந்த அவர், தனது குடும்பத்தினருக்கு மத்தியில் வீட்டில் உயிரிழந்ததாக அந்த இசைக்குழு அறிவித்துள்ளது.
1980ஆம் ஆண்டுகளில் Hungry Like The Wolf, Rio மற்றும் A View to a Kill உள்ளிட்ட பிரபல பாடல்கள் மூலம் உலகளவில் புகழ்பெற்ற டுரான் டுரான் இசைக்குழுவின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக ஆண்டி டெய்லர் திகழ்ந்தார்.
அவரது மனைவி ட்ரேசி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், உலகிற்கு அவர் ஒரு சிறந்த கிட்டார் கலைஞராக இருந்தாலும், தமக்கு அவர் அன்பான கணவர், தந்தை மற்றும் பெருமைக்குரிய தாத்தா எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இசைத்துறை அவரை எவ்வளவு தூரம் அழைத்துச் சென்றாலும், அவர் எப்போதும் குடும்பத்திற்கே முதலிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.







