Thursday, 26 November 2026
கனடா வானிலை
3°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு -3°
  • ஈரப்பதம் 70%
  • காற்று 24 km/h
  • ஸ்காபரோ 1°
  • மார்க்கம் 2°
  • பிரம்டன் 1°
  • மிசிசாகா 2°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▼ 0.44%
  • EUR 1.56 ▼ 0.43%
  • GBP 1.86 ▼ 0.52%
  • CHF 1.71 ▲ 0.21%
  • AUD 0.94 ▼ 0.99%
  • 1 CAD → LKR 233.30 ▲ 0.42%
  • 1 CAD → INR 64.79 ▼ 0.13%
  • AED 0.39 ▼ 0.44%
புதுப்பிப்பு: 2026-11-26 14:23
அண்மைச் செய்திகள்
பூமிக்கு மேலே உருவாகும் AI உலகம்: ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களுக்கு அனுமதி! மனிதக் கலைஞர்களா? செயற்கை நுண்ணறிவா? – இசை உலகில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு தீர்மானம் கின்னஸ் சாதனைகளைத் துரத்தும் அமெரிக்கக் கழுதை – மீண்டும் ஒரு சாதனை! 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Macy’s அணிவகுப்பு – சீரற்ற காலநிலையால் ஒத்திவைப்பு! இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் புதிய வீடுகள் – முதலமைச்சர் விஜய் தலைமையில் திறந்து வைப்பு பிரபல ரொக் இசைக்குழுவின் கிட்டார் கலைஞர் ஆண்டி டெய்லர் காலமானார்! 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீடு! – ஆட்சியில் சாதனை படைக்கும் தமிழக முதலமைச்சர் விஜய்! கொதிக்கும் புதன் கோளில் உறைந்த நீர் – ஆய்வுக்குத் தயாராகும் விண்கலம்! கிழக்கு கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா: 12 ஆயிரம் பாதிப்பு-6,000 பேர் உயிரிழப்பு எகிப்தில் எரிபொருள் தாங்கி விபத்து – 31 பேர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க வலதுசாரி கட்சியுடன் முக்கிய கட்சியொன்று இணைவு!

கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியாக, வலதுசாரி கட்சியொன்றுடன் இணைவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டின் கட்சி அறிவித்துள்ளது. ‘இஸ்ரேல் எமது வீடு’ (Israel Our Home) கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேனுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அக்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இணங்கியுள்ளதாக மத்தியவாத ‘யஷார்’ (Yashar) கட்சி நேற்று தெரிவித்துள்ளது. 

தேர்தலுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட முதலாவது கூட்டணி இதுவாகும். எந்தவொரு கூட்டணியும் 61 ஆசனங்கள் கொண்ட பெரும்பான்மையைப் பெறத் தவறிய நிலையில், புதிய அரசாங்கம் இன்றி கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இஸ்ரேல் பாராளுமன்றம் பதவியேற்றது. 

ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் லிக்குட் (Likud) கட்சியின் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும்பான்மையை இழந்த போதிலும், அவர் காபந்துப் பிரதமராகத் தொடர்கின்ற நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், ஐசன்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார். 28 நாள் கால அவகாசத்தின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐசன்கோட்டிற்கு எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளதோடு, அவர் 14 நாட்கள் கால நீடிப்பையும் கோர முடியும். 

ஐசன்கோட் இதில் தோல்வியடைந்தால், அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு நெதன்யாகுவிற்கு வழங்கப்படும். எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு மற்றுமொரு தேர்தல் நடத்தப்படும். 120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் (Knesset), தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மரபுவழி கட்சிகளுடனான வலதுசாரி லிக்குட் கூட்டணி 53 ஆசனங்களைக் கொண்டுள்ளது. 

ஐசன்கோட்டின் மத்திய-வலதுசாரி யஷார் கட்சி மற்றும் லிபர்மேன் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் 48 ஆசனங்களைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், 19 ஆசனங்களைக் கொண்டுள்ள இஸ்ரேலின் பலஸ்தீன சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், நெதன்யாகுவிற்கு எதிரான தமது தீவிர நிலைப்பாட்டில் ஐசன்கோட்டுடன் இணைந்து செயற்படுவதால், அக்கட்சிகள் சாத்தியமான கூட்டாளிகளாகக் கருதப்படுகின்றன. 

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8361044013842299&output=html&h=280&num_ads=1&adk=2424096637&adf=3041733301&abgtt=9&w=690&fwrn=4&fwrnh=100&lmt=1795667447&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2332255813&ad_type=text_image&format=690×280&url=https%3A%2F%2Fhirunews.lk%2Ftm%2F503041%2Fa-major-party-joins-forces-with-a-right-wing-party-to-form-a-new-government-in-israel&fwr=0&pra=3&rh=173&rw=690&rpe=1&resp_fmts=3&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTkuMC4wIiwieDg2IiwiIiwiMTU4LjAuODEyNy4zNyIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjE1OC4wLjgxMjcuMzciXSxbIk5vdC5BL0JyYW5kIiwiMjQuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxNTguMC44MTI3LjM3Il1dLDBd&dt=1795663756807&bpp=1&bdt=3164&idt=0&shv=r20261118&mjsv=m202611110101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D3a9b265546b91276%3AT%3D1784919350%3ART%3D1795667170%3AS%3DALNI_Ma740ybq-n5I_QmMaL8jGbd38VFpQ&gpic=UID%3D0000150781bdce8e%3AT%3D1784919350%3ART%3D1795667170%3AS%3DALNI_MbkhIExL6hJ_wB5a-yiWZIpS1ycmg&eo_id_str=ID%3D269902ab5c088cc0%3AT%3D1784919350%3ART%3D1795667170%3AS%3DAA-AfjYzAxrIstTGHxwawXAJzo9R&prev_fmts=0x0%2C690x280%2C690x280&nras=4&correlator=6931181083110&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=900&u_w=1600&u_ah=852&u_aw=1600&u_cd=24&u_sd=1&dmc=8&adx=328&ady=2667&biw=1585&bih=750&scr_x=0&scr_y=0&eid=95408439%2C95409688%2C95409874%2C95409937%2C122882241%2C95407167&oid=2&pvsid=7555025531310962&tmod=1196251153&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fhirunews.lk%2Ftm%2F&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C1600%2C0%2C0%2C0%2C1600%2C765&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&bz=0&ifi=11&uci=a!b&btvi=3&fsb=1&dtd=M

லிபர்மேன் முன்னைய நெதன்யாகு அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய போதிலும், பின்னர் அவரது தீவிர விமர்சகராக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தேசிய ஒற்றுமை அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஐசன்கோட், அவரது ‘மாற்றத்திற்கான கூட்டணி’ பங்காளிகள் சிலர் மற்றும் லிக்குட் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. 

இருப்பினும், நெதன்யாகுவின் லிக்குட் கட்சியுடன் சாத்தியமான ஒற்றுமை அரசாங்கம் குறித்து யஷார் கட்சித் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எட்டுப் பாராளுமன்ற ஆசனங்களை வென்ற இடதுசாரி ஜனநாயகக் கட்சி (Democrats), ஐசன்கோட்டுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாகத் தனியாக அறிவித்துள்ளது. நெதன்யாகு இல்லாத, ஆனால் அரபுக் கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தையே தாம் விரும்புவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயர் கோலன் தெரிவித்துள்ளார்.