லிவர்பூல் முதல் ஸ்கொட்லாந்து வரை, மிடில்ஸ்பரோ முதல் லண்டன் வரை – தேசிய அடையாளம், வரலாற்று நினைவுகள் மற்றும் தன்னாட்சிக்கான தமிழர் அரசியல் அபிலாஷைகளை உலகிற்கு எடுத்துரைத்த தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள் 2026.
தமிழீழத் தேசிய அடையாளத்தின் அடையாளமாகவும், ஒரு தேசிய இனத்தின் வரலாற்று நினைவுகள், தியாகங்கள், விடுதலை வேட்கை மற்றும் அரசியல் அபிலாஷைகளைத் தாங்கி நிற்கும் புனித அடையாளமாகவும் விளங்கும் தமிழீழத் தேசியக் கொடியை முன்னிறுத்தி, 2026ஆம் ஆண்டுக்கான தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
நாடுகடந்த தமிழீழ அரசின் (Transnational Government of Tamil Eelam – TGTE) ஏற்பாட்டில், நவம்பர் 21ஆம் திகதி லிவர்பூல், ஸ்கொட்லாந்து மற்றும் மிடில்ஸ்பரோ ஆகிய பகுதிகளிலும், நவம்பர் 22ஆம் திகதி லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க டிரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) பிரதான தேசிய நிகழ்வும் நடைபெற்றன.
இந்நிகழ்வில், தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு அணிவகுத்துச் சென்ற செயற்பாட்டாளர்கள், தமிழர் பாரம்பரிய இசைக்குழுவின் இசை முழக்கம், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் எனத் தமிழர் தேசிய உணர்வையும் பண்பாட்டு அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை இநநிகழ்விற்கு மேலும் வழுச் சேர் த்திருந்தது எனலாம்.
மேலும் இவை வெறுமனே கொடியேற்ற நிகழ்வுகளாக அமையவில்லை. தாயகத்தைப் பிரிந்து வாழ்ந்தாலும் தேசிய அடையாளத்தையும் வரலாற்றையும் மறக்காத ஒரு இனத்தின் கூட்டு உணர்வையும் அரசியல் உறுதியையும் வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைந்தன.
நவம்பர் 22ஆம் திகதி லண்டனின் புகழ்பெற்ற டிரஃபல்கர் சதுக்கத்தில் நடைபெறற பிரதான தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு, இவ்வாண்டின் முக்கிய தேசியக் கொடி நாள் நிகழ்வாக அமைகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் கூடும் வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சதுக்கத்தில் தமிழீழத் தேசியக் கொடி உயர்த்தப்படுவது, தமிழர் தேசிய அடையாளத்தையும் அரசியல் அபிலாஷைகளையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்வானது பல்லாயிரக்கண க்கான தமிழ் மக்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தின் உயரமட்ட உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரித்தானியக் கொடியானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல்துறை அமைச்சர் மதிப்புக்குரிய திரு. சுதர்ஷன் அசோகன் அவர்களால் ஏற்றப்பட்டது. இவர்
கொழும்பில் பிறந்து, கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு புனித மிகேல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவரா வார் அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முதுமாணிப்பட்டம் பெற்றவர். என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த காலங்களில் ‘Virakesari Express’ மற்றும் ‘Metro News’ ஆகிய ஊடகங்களில் குற்றவியல் கட்டுரை ஊடகவியலாளராகப் பணியாற்றித் தமது முத்திரையைப் பதித்த இவர், தற்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். என்பது சிறப்பம்சமாகும்.
அத்துடன் தமிழீழத் தேசியக் கொடியை முன்னாள் போராளியும், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் மகளிர் அமைப்பின் இணைப்பாளரும், இளையோர் பண்ணிசை அணியின் மேலளாரும் ஆகிய திருமதி பூங்குயில் அவர்கள் ஏற்றி வைத்தமைய் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கிய செயற்பாட்டாளர்களின் பங்கேற்பு, தமிழர் பாரம்பரிய இசைக்குழுவின் இசை மற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகள் எனத் தமிழர் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பிரதான நிகழ்வு அமைந்திருந்தது.
அதேபோன்று நவம்பர் 21ஆம் திகதி லிவர்பூலில் நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வானது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதியமைச்சர் திரு. யோகன்ரட் னம் தலைமையிலும்
பிராந்திய காரியாலயத்தின் ஒருங்கிணைப்புட னும் நடைபெற்ற நிகழ்வில் பிரித்தானியக் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டன.
பிரித்தானியக் கொடியை திரு.குணசீலன் வன்னியசிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். இவர் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் தோற்றுவிப்பாளரும் ஆவார்.
அத்துடன் தமிழீழத் தேசியக் கொடியை திரு.அகிலவானார் அம்பலவானர் அவர்கள் ஏற்றி வைத்தார். இவர் நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னாள் இளையோர் அமைச்சரும், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் பணிப்பாளரும் ஆவார்.
வரலாற்றைப் பாதுகாப்பதும், தேசிய அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் ஒரு தேசிய இனத்தின் முக்கியமான பொறுப்பு என்பதை இந்நிகழ்வு மீண்டும் வலியுறுத்தியது.
இந்நிகழ்வில் நாடுகந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணி செயற்பாட்டலர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
ஸ்கொட்லாந்திலும் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் அமைச்சர் திருமதி. துசான்லி உபே ந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் தாயகத்திலிருந்து தொலைதூரத்தில் வாழ்ந்தாலும், தமிழர் தேசிய அடையாளத்தின் மீதான பற்றும் தாயகத்தின் மீதான நினைவுகளும் தலைமுறைகள் கடந்து தொடர்கின்றன என்பதை அங்குள்ள தமிழர்களின் பங்கேற்பு வெளிப்படுத்தியது.
புவியியல் எல்லைகள் ஒரு மக்களின் தேசிய உணர்வையும் வரலாற்றுப் பற்றையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு இந்நிகழ்வுகளும் சான்றாக அமைந்தன.
மிடில்ஸ்பரோ – தேசியப் பற்றுடன் உயர்ந்த தமிழீழத் தேசியக் கொடி
நவம்பர் 21ஆம் திகதி மிடில்ஸ்பரோவில் நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு, அப்பகுதி தமிழர் சமூகத்தின் ஒற்றுமையையும் தேசியப் பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசின் மிடில்ஸ்பரோ ஒருங்கிணைப்பாளர் திரு.கமல்ராஜ் பரமேஸ்வரன் தலைமையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் திரு. மணிவண்ணன் பத்மநாபன், பிரதியமைச்சர் திரு. அன்ரன் நோபேர்ட் வேதநாயகம் மற்றும் பல முன்னணிச் செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரித்தானியக் கொடியை திரு. ரஞ்சன் விநோதன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியை மிடில்ஸ்பரோ மற்றும் டீசைட் பிராந்திய ஒருங்கிணைப்பாளரான திரு. கமல்ராஜ் பரமேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு செயற்பாட்டாளர்கள் பெருமிதத்துடன் பங்கேற்றதுடன், தமிழர் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நிகழ்விற்கு மேலும் உணர்வு பூர்வமான சிறப்பைச் சேர்த்தன.
அத்துடன் மிடில்ஸ்பரோ மற்றும் டீசைட் வாழ் தமிழர்களைப் பொறுத்தவரையில், இது ஒரு கொடியேற்ற நிகழ்வு மட்டுமல்ல. கடந்த காலத் தியாகங்களை நினைவுகூரவும், நிகழ்காலத் தேசியப் பொறுப்புகளை உணரவும், எதிர்காலத் தலைமுறையினரிடம் தமிழர் தேசிய அடையாளத்தைப் பாதுகாத்துக் கையளிக்கவும் வேண்டிய உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக அமைந்தது.
மேலும் தமிழீழத் தேசியக் கொடி என்பது வெறுமனே ஒரு தேசிய அடையாளச் சின்னம் மட்டுமல்ல. அது ஒரு மக்களின் வரலாறு, அரசியல் போராட்டம், இழப்புகள், தியாகங்கள், மீளெழுச்சி மற்றும் தன்னாட்சிக்கான நீண்டகால அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் அடையாளமாகப் பல தமிழர்களால் போற்றப்படுகின்றது.
ஒவ்வொரு முறையும் அந்தக் கொடி ஏறப்படும்போது , தமது உயிர்களை அர்ப்பணித்தவர்களின் நினைவுகளும், போர் மற்றும் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலிகளும், நீதிக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளும் நினைவுகூரப்பட்ட்து.
கொடியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு செயற்பாட்டாளரும், இசையின் ஒவ்வொரு முழக்கமும், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு இளம் தலைமுறையினரும் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகின்றனர்: ஒரு மக்களின் தேசிய அடையாளம் என்பது வெறுமனே அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமல்ல; மொழி, கலை, பண்பாடு, வரலாறு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றின் ஊடாகவும் பாதுகாக்கப்படுகின்றது.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டின் பிரித்தானியத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள், புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதிலும், தமிழர் அரசியல் பிரச்சினையை சர்வதேச அரசியல் அரங்கில் தொடர்ந்து முன்வைப்பதிலும் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகின்றன.
மேலும் லிவர்பூல், ஸ்கொட்லாந்து, மிடில்ஸ்பரோ மற்றும் லண்டன் எனப் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகள், தமிழர் தேசிய உணர்வு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட முடியாதது என்பதை எடுத்துரைக்கின்றன.
ஒரு கொடியை ஒரு சதுக்கத்திலோ, மண்டபத்திலோ, கடல் கடந்த ஒரு நகரத்திலோ ஏற்றலாம். ஆனால் அந்தக் கொடி தாங்கி நிற்கும் வரலாற்றையும், அடையாளத்தையும், மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் எந்தப் புவியியல் எல்லைகளுக்குள்ளும் முடக்கிவிட முடியாது.என்பதை வலியுறுத்தி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.









