அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்புச் சந்திப்பு இன்று சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்றது.
உலகின் மூன்று முக்கிய அணுவாயுத வல்லரசுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் கலந்தகொண்ட இந்தப் பேச்சுவார்த்தையின்போது யுக்ரைன் மற்றும் ஈரான் போர்கள், அணுவாயுதப் பரவல், வர்த்தக முரண்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றி கொண்டிருக்கும் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தூங்கக் கலக்கத்தில் இருந்துள்ளார்.
பின்னர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சற்று நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ட்ரம்ப் தூங்கி வீழ்ந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.




