Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம்

தமிழ் நாட்டின் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றமை தொடர்பில் பா.ஜ.க தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு வருகைத்தந்த நிலையில் தொல் திருமாவளவன் விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கும் சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே இந்த விடயம் குறித்து தமிழ்நாட்டை மையப்படுத்தும் பா.ஜ.க தரப்பினர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜயின் ஆட்சியை கேள்விக்குட்படுத்தும் செயல் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜ.கவின் பிரதம பேச்சாளர் நாராயணன் திருப்பதி, X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக்கு செல்ல முன்வரும் எந்தவொரு இந்திய அரசியல் தலைவரும் தமிழர்களுடன் ஒற்றுமையைக் காட்டவில்லை.

குறிப்பாக திருமாவளவன், ராஜீவ் காந்தியின் நினைவை அவமதிக்கிறார்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசில் வி.சி.கவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது குறித்தும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.