Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

 கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை

செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தகவல்கள், ஆவணங்களை வழங்கி நீதிமன்றத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னட் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவில் வசித்துவரும் அவர், தனது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில்  சத்தியக்கடதாசியொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச செம்மணி மனிதப் புதைகுழியை அடையாளம் காண்பித்தபோது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தானும் அங்கு நேரடியாக இருந்ததாக அருட்தந்தை தனது சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

1992 ஜூலை முதல் 2002 ஜூன் வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் முதல்வராகவும், யாழ் மறைமாவட்டத்தின் நீதி மற்றும் சமாதான ஆணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய காலத்தில் மனித உரிமைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1996ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம், அது சார்ந்த வரலாற்றுப் பின்னணி குறித்துத் தனக்குப் போதிய அறிவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 1995 முதல் 2005 வரையிலான இராணுவ நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோதப் படுகொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்ட நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்றுள்ளதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்குத் தானே கடிதங்கள் மற்றும் மனுக்களை அனுப்பி உரிய தலையீட்டைக் கோரியதாகவும் அவர் விவரித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி விசாரணையானது உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் நீதியுடன் தொடர்புடைய மிக முக்கியமான விவகாரமாகும் என அருட்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தன்னிடமுள்ள ஆவணக் காப்பகப் பதிவுகள் மற்றும் நேரடி அனுபவங்கள் தற்போதைய நீதிமன்ற விசாரணைக்குப் பேருதவியாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், சட்டபூர்வமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.