Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்

மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தவெகவை சேர்ந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பால் மருத்துவமனையிலே காலமானார்.

வி.எஸ்.பாபுவின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வி.எஸ்.பாபுவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூரில் உள்ள வி.எஸ்.பாபுவின் வீட்டிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் விஜய்,வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்

வி.எஸ்.பாபுவின் மறைவு காரணமாக நாளை திருச்சி செல்லவிருந்த முதல்வரின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

7 நாட்களுக்கு கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்து, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.