Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மக்கள் தமது முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை உடனடியாகப் பாதுகாப்பான முறையில் காப்புப் பிரதி எடுத்து வைக்குமாறும், செயலிகள் மற்றும் இயங்குதளங்களை உடனுக்குடன் புதுப்பித்து வைத்திருக்குமாறும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளவில் முன்னணி இணையத்தளங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் நாளாந்தம் ஏற்பட்டு வரும் திடீர் முடக்கங்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் சுமார் 200 இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் சில செயலிகள் மற்றும் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகி பின்னர் மீளமைக்கப்பட்டன.

இதனால் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் அதிகபட்ச விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றன. இது குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சைபர் பாதுகாப்புக்குப் பொறுப்பான குடிமக்கள் சேவைகள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் தனது கட்டமைப்புகள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், அரச வலையமைப்புக்குள் தினமும் மேற்கொள்ளப்படும் கோடிக்கணக்கான அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் முயற்சிகளைத் தடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களும் அமெரிக்க அரச நிறுவனங்களும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இவ்வாறான சேவைத் தடைகளுக்குப் பின்னால் திட்டமிட்ட சைபர் தாக்குதல்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.