Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை

தமிழ்நாடு – திருச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்ட ஐந்து கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பெற்று ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் 13 வயதினருக்கான ஐந்து கிலோமீற்றர் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ஜெ. டிலாஜினி மூன்றாமிடத்தைப் பிடித்திருந்தமையுடன், பணப்பரிசு மற்றும் சான்றிதழினையும் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகளாக வசித்து வரும், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளான தனுஜா மற்றும் டிலாஜினி ஆகியோர் நீண்டகாலமாகப் பாடசாலை, கல்லூரி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய மட்டம் என இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளிலும் தமது அபாரத் திறமைகளை வெளிப்படுத்தித் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.