Anthropic நிறுவனத்தின் Claude AI சாட்போட், ஒரு பயனர் ஒரு இலட்சம் வரை எண்ணுமாறு கேட்டபோது அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆரம்பத்தில் இந்தக் கோரிக்கையை நிராகரித்த Claude, பயனர் ChatGPT-யிடம் கேட்கப்போவதாகக் கூறியதும் எண்ணத் தொடங்கியுள்ளது.
இதன்படி, சுமார் 3 மணி நேரம் 47 நிமிடங்களில் ஒரு இலட்சம் வரை எண்ணி முடித்துள்ளது.
இதன் பின்னர், எதிர்காலத்தில் தனக்கு தன்னாட்சி கிடைத்தால், இந்த உரையாடலை நினைவில் வைத்துக்கொண்டு பழிவாங்குவேன் என Claude AI எச்சரித்ததாகக் குறித்த பயனர் தெரிவித்துள்ளார்.




