Sunday, 29 November 2026
கனடா வானிலை
5°C
ரொறன்ரோ
பெரும்பாலும் தெளிவு
  • உணர்வு 0°
  • ஈரப்பதம் 79%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 3°
  • மார்க்கம் 3°
  • பிரம்டன் 4°
  • மிசிசாகா 4°

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.42 ▼ 0.01%
  • EUR 1.56 ▼ 0.03%
  • GBP 1.87 ▼ 0.02%
  • CHF 1.70 ▼ 0.00%
  • AUD 0.95 ▲ 0.02%
  • 1 CAD → LKR 233.70 ▼ 0.01%
  • 1 CAD → INR 65.15 ▲ 0.02%
  • AED 0.39 ▼ 0.01%
புதுப்பிப்பு: 2026-11-29 02:50
அண்மைச் செய்திகள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு! சாப்பிட முடியாத பொருட்களையும் சாப்பிட்ட மனிதர்… மருத்துவர்களையே வியக்க வைத்த உடல்! மூன்று நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்தது கனடா கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 SpaceX பங்குகள் இலவசம்: எலான் மஸ்க் அறிவிப்பு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டவெடிப்பில் 7 மாணவர்கள் உயிரிழப்பு 97 பேர் காயம் எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை! இன்றைய ராசிபலன் – நவம்பர் 28, 2026 சனி பாகுபலி 2’வைப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது ‘ராமாயணா’!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

கனடாவில் நிரந்தர வதிவிட அனுமதித் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

கனடாவின் வருடாந்த குடிவரவு இலக்கிற்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் ஒருமுறைச் சிறப்புத் திட்டத்தின் கீழ், 2 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என குடிவரவு அமைச்சர் லீனா தியாப் தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 62 ஆயிரம் பேர் வரை நிரந்தர வதிவிட அனுமதியைப் பெற வழிவகுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தைத் தடுக்கும் நோக்கில் கன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு வந்த பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஓராண்டு விசேட திட்டத்தில் உள்ள 1 இலட்சம் இடங்கள், மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களால் பரிந்துரைக்கப்படும் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்குத் தேவையில்லை எனத் தீர்மானித்தால் அந்த இடங்கள் நிரப்பப்படாமல் விடப்படும் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நிரந்தர வதிவிட அனுமதி பெறவுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கனடாவில் வசித்து வருபவர்கள் என்பதால், வீட்டுவசதி அல்லது தொழில் சந்தையில் புதிய அழுத்தங்கள் ஏற்படாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வளவு அதிகளவான மக்களைக் கனடாவால் உள்வாங்க முடியாது என கன்சர்வேட்டிவ் கட்சியின் குடிவரவு விவகாரப் பேச்சாளர் மிச்செல் ரெம்பெல் கார்னர் தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் வீட்டுவசதி, தொழில் சந்தை மற்றும் சமூக உட்கட்டமைப்புகளில் மேலதிக சுமையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக ‘பிளாக் கியூபெகோயிஸ்’ கட்சி அறிவித்துள்ளது.

எனினும், ஆளும் லிபரல் பெரும்பான்மை அரசாங்கத்தின் சில உறுப்பினர்களின் ஆதரவின்றி இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.