Thursday, 19 November 2026
கனடா வானிலை
15°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 54%
  • காற்று 19 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 17°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.19%
  • EUR 1.57 ▼ 0.02%
  • GBP 1.88 ▼ 0.15%
  • CHF 1.70 ▼ 0.11%
  • AUD 0.96 ▼ 0.07%
  • 1 CAD → LKR 232.27 ▼ 0.23%
  • 1 CAD → INR 65.23 ▼ 0.24%
  • AED 0.39 ▲ 0.20%
புதுப்பிப்பு: 2026-11-19 18:37
அண்மைச் செய்திகள்
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கும் அமெரிக்கத் தூதர்கள் கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது! வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் கனடாவில் ரயில் மோதி பெண் பலி! கனடிய பிரதமரின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்ட நபர் ! பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! விடுதலைப் புலிகள் தலைவரின் இல்லத்துக்கான திருமாவளவனின் விஜயம்! பா.ஜ.க கடும் கண்டனம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி படைத்த சாதனை  கனடாவிலிருந்து சத்தியக் கடதாசி தாக்கல் செய்த அருட்தந்தை ரஷ்யாவுடன் போர் மூண்டால் மீண்டும் இராணுவத்தில் இணைவேன்! – இளவரசர் ஹரியின் அதிரடி அறிவிப்பு!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

புகழ்பெற்ற கவிஞர் உருத்திரமூர்த்தி சேரன் கனடாவில் காலமானார்

ஈழத்தின் தலைசிறந்த நவீன கவிஞரும், சமூகவியல் பேராசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் தன66 ஆவது வயதில் கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்று (18) இரவு காலமானார். 

நீண்டகாலமாகச் சிறுநீரக நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த இவர், ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற சேரன், பின்னர் நெதர்லாந்தில் முதுகலைப் பட்டத்தையும், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) சமூகவியலில் முனைவர் பட்டத்தையும் (PhD) பெற்றார். 

கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் (University of Windsor) சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய இவரது புலம்பெயர் தமிழர்கள், இனத்துவ மோதல்கள் மற்றும் இடப்பெயர்வு குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை. 

1980களில் ஈழத்தில் ஏற்பட்ட போர்ச்சூழல், இனக்கலவரங்கள் மற்றும் 1981 யாழ் பொது நூலக எரிப்பு ஆகியவற்றின் வலிகளையும், மக்களின் உணர்வுகளையும் தனது கவிதைகள் வழியாக உலகறியச் செய்தவர் சேரன்.

 இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு மற்றும் காடாற்று ஆகியவை இவரது முக்கியக் கவிதைத் தொகுப்புகளாகும்.

 அத்துடன், மரணத்துள் வாழ்வோம் (1985) எனும் புகழ்பெற்ற ஈழத்துப் போராட்டக் கவிதைத் தொகுப்பினையும் இவர் இணைந்து தொகுத்திருந்தார். 

1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த Saturday Review ஆங்கில வார இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றி மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த இவர், 2016 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க ‘ஓ.என்.வி சர்வதேச இலக்கிய விருதினை’ (ONV International Literary Award) பெற்றார்.

 ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு, ஜேர்மன் உட்பட 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது படைப்புகள் உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளன.

 ஈழத்துப் போர்க்கால இலக்கியத்திற்கும், புலம்பெயர் தமிழ் அறிவுசார் தளத்திற்கும் பேராசிரியர் சேரனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்