
கடந்த ஒரு வார காலப்பகுதியில் அமெரிக்காவில் மைக்ரோசொப்ட், விமான சேவைகள், வங்கிகள் மற்றும் அப்பிள் நிறுவன சேவைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தொழில்நுட்பத் தடைகளுக்கு இடையே தொடர்பு இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அச்சங்களை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ நிராகரித்துள்ளார்.
இந்தச்சம்பவங்களுக்குப் பின்னால் எந்தவொரு சதியோ அல்லது சைபர் தாக்குதலோ இல்லை எனவும், இதற்கான “பூஜ்ஜிய ஆதாரமே” உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அனைத்து விமானப் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டமை, வங்கிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதை ஏற்றுக்கொண்ட ரூபியோ, நாடு எந்தவொரு திட்டமிட்ட தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
குறித்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி நிகழ்வுகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் ஜே கிளேட்டனும் இந்தத் தடைகள் சைபர் தாக்குதல்களின் விளைவு அல்ல என உறுதிப்படுத்தியுள்ளார்.
பல நிறுவனங்கள் தமது பழைய டிஜிட்டல் கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளமையே இத்தகைய இடையூறுகளுக்குக் காரணம் என நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

