Friday, 20 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 13°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 16°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.03%
  • EUR 1.57 ▲ 0.07%
  • GBP 1.88 ▼ 0.31%
  • CHF 1.70 ▼ 0.03%
  • AUD 0.96 ▼ 0.64%
  • 1 CAD → LKR 232.29 ▲ 0.01%
  • 1 CAD → INR 65.17 ▼ 0.09%
  • AED 0.39 ▲ 0.03%
புதுப்பிப்பு: 2026-11-20 18:40
அண்மைச் செய்திகள்
மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் தாய்வானுடனான வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும்: கார்னி மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை AI தொழில்நுட்பம் மூலம் பட்டியலிட்ட பொலிஸார் தம்பியை தவறுதலாக சுட்ட அண்ணன் ; அமெரிக்காவில் பலியான இந்திய மாணவர் இரட்டை சகோதரிகள் படைத்த விசித்திர கின்னஸ் சாதனை கனடாவில் இனவெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் கைது! இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்கள் மாயம்..? பிரிட்டன் அறிக்கையால் வெடித்த விவகாரம் பகிடிவதையால் சபரகமுவ பல்கலை மாணவன் உயிரிழந்த சம்பவம் – அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய எம்.பி. – நெகிழ்ந்த காதலி!
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்தார்

இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று (20) நாட்டை வந்தடைந்துள்ளார்.

ரஷ்ய நாட்டவரான இவருடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிடுகையில், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் என்ற எல்லையைத் தாண்ட முடிந்துள்ளதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இதுவொரு விசேட வெற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் இந்த 20 இலட்சம் என்ற எல்லை தாண்டப்பட்டுள்ளது.

பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தனது முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகப் பேணி வருவது, நாட்டின் சுற்றுலாத்துறை மீது காணப்படும் சர்வதேச நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவும், 2025 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதனையை 2026 ஆம் ஆண்டில் முறியடிப்பதே எதிர்பார்ப்பாகும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.