Friday, 20 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 13°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 16°
  • மார்க்கம் 16°
  • பிரம்டன் 16°
  • மிசிசாகா 16°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.03%
  • EUR 1.57 ▲ 0.07%
  • GBP 1.88 ▼ 0.31%
  • CHF 1.70 ▼ 0.03%
  • AUD 0.96 ▼ 0.64%
  • 1 CAD → LKR 232.29 ▲ 0.01%
  • 1 CAD → INR 65.17 ▼ 0.09%
  • AED 0.39 ▲ 0.03%
புதுப்பிப்பு: 2026-11-20 18:40
அண்மைச் செய்திகள்
மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் தாய்வானுடனான வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும்: கார்னி மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை AI தொழில்நுட்பம் மூலம் பட்டியலிட்ட பொலிஸார் தம்பியை தவறுதலாக சுட்ட அண்ணன் ; அமெரிக்காவில் பலியான இந்திய மாணவர் இரட்டை சகோதரிகள் படைத்த விசித்திர கின்னஸ் சாதனை கனடாவில் இனவெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் கைது! இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்கள் மாயம்..? பிரிட்டன் அறிக்கையால் வெடித்த விவகாரம் பகிடிவதையால் சபரகமுவ பல்கலை மாணவன் உயிரிழந்த சம்பவம் – அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய எம்.பி. – நெகிழ்ந்த காதலி!
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை AI தொழில்நுட்பம் மூலம் பட்டியலிட்ட பொலிஸார்

கனடாவின் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளின் புதிய பட்டியலை வெளியிடும் நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அவர்களின் முழு உருவ காணொளிகள் டொரொன்டோ பொலிஸ் கல்லூரியில் திரையிடப்பட்டன.

வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ‘போலோ’ திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மக்ஸ் லாங்லோயிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளையும் இந்த அறைக்குள் கொண்டு வந்துள்ளோம்.

வீதியிலோ, பல்பொருள் அங்காடியிலோ அல்லது விமான நிலையத்திலோ நீங்கள் அவர்களைப் பார்த்தால் எப்படி நடமாடுவார்களோ, அதேபோன்று அவர்களின் அசைவுகள் இதில் காட்டப்பட்டுள்ளன.

இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், அதுவே எமது நோக்கமும் கூட” எனக் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் தனியார் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கி வரும் போலோ திட்டத்துடன் இணைந்து, கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் பிரிவுகள் இந்த புதிய பட்டியலை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை மீண்டும் கோரியுள்ளன.

இந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து டொரொன்டோ பொலிஸ் மா அதிபர் மைரன் டெம்கிவ் கூறுகையில், “பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து செயற்பட்டால் என்ன நடக்கும் என்பதை போலோ திட்டம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. 2018 முதல் போலோ பட்டியலில் இடம்பெற்ற டொரொன்டோவைச் சேர்ந்த 28 வழக்குகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த குற்றவாளியும் இதில் அடங்குவார்” என்றார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு டொரொன்டோவின் யோர்க்டேல் வணிக வளாகத்திற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலை தொடர்பில் தேடப்பட்டு, கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரையன் ஃபுவென்டெஸ் கிராமஜோ, 2026 மார்ச் 5 அன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலிருந்த டிலான் டெனிஸ், தமா மெக்லீன், டெல்லானோ ரொபர்ட்சன்-பெர்ரி, குர்கிராத் சிங், யூசுப் அலி மற்றும் டொமி பெர்னியர்-திபோல்ட் ஆகிய ஆறு பேர் மட்டுமே இந்த ஆண்டு பட்டியலிலும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளனர். ஏனைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.