Sunday, 22 November 2026
கனடா வானிலை
13°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 7 km/h
  • ஸ்காபரோ 13°
  • மார்க்கம் 14°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 11°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 20:10
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

காவல்துறை உண்மையில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா..? கனிமொழி எம்.பி. கேள்வி

காவல்துறை உண்மையில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா..? என கனிமொழி எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.