Sunday, 22 November 2026
கனடா வானிலை
13°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 7 km/h
  • ஸ்காபரோ 13°
  • மார்க்கம் 14°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 11°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 20:10
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – 21 பேர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த நவம்பர் 19ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்த மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து, மோதலில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 21 மாணவர்களைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மாணவர்கள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மோதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சில மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தாலும், காவல்துறையினரின் விசாரணைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மோதலுக்கான காரணங்கள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.