Sunday, 22 November 2026
கனடா வானிலை
13°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 11°
  • ஈரப்பதம் 68%
  • காற்று 7 km/h
  • ஸ்காபரோ 13°
  • மார்க்கம் 14°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 11°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 20:10
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

FBI-யினால் தேடப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது! – மெக்சிகோவில் அதிரடி சம்பவம்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான FBI-யின் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பத்து பேரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஃபவுஸ்டோ இசிட்ரோ மேசா ஃப்ளோரஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவின் சினலோவா மாகாணத்தில் உள்ள குவாசாவே பகுதியில் அந்நாட்டின் விசேட படையினர் முன்னெடுத்த நடவடிக்கையின்போது அவர் உள்ளிட்ட எட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதல்களில் ஏழு சந்தேகநபர்களும் நான்கு மெக்சிகோ இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது துப்பாக்கிகள், கைக்குண்டு ஏவும் ஆயுதம், போதைப்பொருட்கள் மற்றும் பெருமளவு பணம் ஆகியனவும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

44 வயதான மேசா ஃப்ளோரஸ், 1990ஆம் ஆண்டுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், குவாசாவே எனப்படும் போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

பென்டானில், கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை அமெரிக்காவுக்குக் கடத்தியமை, ஆட்களைக் கடத்தியமை, கப்பம் கோரியமை மற்றும் சித்திரவதை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு மெக்சிகோ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் பென்டானில் மாத்திரைகள் அவரது போதைப்பொருள் கடத்தல் அமைப்புடன் தொடர்புடையவை எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு அவர் FBI-யின் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.