Sunday, 22 November 2026
கனடா வானிலை
8°C
ரொறன்ரோ
மேகமூட்டம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 97%
  • காற்று 4 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 11°
  • பிரம்டன் 9°
  • மிசிசாகா 6°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 13:31
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

நிலவில் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து! தீர்வு காண்போருக்கு ரூ.4.98 கோடி பரிசு!

நிலவில் விண்வெளி வீரர்கள் அணியும் பாதுகாப்பு உடைகளில் ஏற்படும் நிலை மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நாசா புதிய போட்டியொன்றை அறிவித்துள்ளது.

இதற்கான தீர்வை முன்வைப்பவர்களுக்கு அதிகபட்சமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் (சுமார் 4 கோடியே 98 இலட்சத்து 36 ஆயிரம் இலங்கை ரூபாய்) பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் நடமாடும்போது, நிலவின் தூசுகள் மற்றும் சுற்றுச்சூழலில் காணப்படும் மின்னூட்டத் துகள்களின் தாக்கத்தால் அவர்களின் பாதுகாப்பு உடைகளில் மின்சாரம் தேங்கக்கூடும்.

குறிப்பாக, நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய ஒளி கிடைக்காத இருண்ட பகுதிகளுக்குச் செல்லும்போது இந்த நிலைமை தீவிரமடையலாம் என நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு மின்சாரம் தேங்கிய நிலையில் விண்வெளி வீரர்கள் மீண்டும் விண்கலத்தை அணுகும்போது, பாதுகாப்பு உடைக்கும் விண்கலத்திற்கும் இடையில் மின்னழுத்த வேறுபாடு ஏற்பட்டு திடீர் மின்பொறிகள் உருவாகக்கூடும்.

இதனால் விண்வெளி வீரர்களுக்கு மின்சார அதிர்ச்சி ஏற்படுவதுடன், பாதுகாப்பு உடைகளின் முக்கிய பாகங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களும் சேதமடையக்கூடிய அபாயம் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தடுப்பதற்காக, விண்வெளி வீரர்கள் விண்கலத்தைத் தொடுவதற்கு முன்னர் அவர்களின் பாதுகாப்பு உடைகளில் தேங்கியுள்ள மின்சாரத்தைப் பாதுகாப்பாக வெளியேற்றக்கூடிய புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிவதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.

இந்தப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியின் ஆரம்பக்கட்டத்தில் ஐந்து வரையான இறுதிப் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு, அவர்களின் தொழில்நுட்ப யோசனைகள் அடுத்தகட்டத்தில் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.