Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
கனடா செய்திகள்

டொரொன்டோ பூங்காவில் 5 வயது சிறுவன் மீது ஓநாய் தாக்குதல்

கனடாவின் டொரொன்டோ நகரின் நோர்த் யோர்க் பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில், ஐந்து வயது சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் நடத்தியுள்ளதையடுத்து, டொரொன்டோ பொலிஸார் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் தி பிரைடல் பாத் ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள எட்வர்ட்ஸ் கார்டன்ஸ் பூங்காவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான சிறுவனை ஓநாய் சிறிது தூரம் இழுத்துச் சென்றதாகவும், அங்கிருந்த பொதுமக்கள் சத்தமிட்டு அந்த விலங்கை விரட்டியடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடத்திய போதிலும், குறித்த ஓநாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் சிறுவனுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த டொரொன்டோ மருத்துவப் பணியாளர்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்து பரிசோதித்த பின்னர், பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஓநாய்களைக் கண்டால் உடனடியாக 311 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு டொரொன்டோ பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், “மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகள் ஓநாயால் தாக்கப்பட்டால் உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்கவும்” என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தத் தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் கமெராவிலும், எட்வர்ட்ஸ் கார்டன்ஸ் தாவரவியல் பூங்காவில் ஓநாய் ஒன்று எவ்வித அச்சமுமின்றி உலாவுவது பதிவாகியுள்ளது.

அண்மைய நாட்களாக இப்பகுதியில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.