Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்திகள்

40 மணிநேரம் உறக்கமின்றி GTA VI விளையாடிய IShowSpeed – 82 வீதக் கதையை நிறைவு செய்தார்!

பிரபல இணையவழி விளையாட்டு ஒளிபரப்பாளரான IShowSpeed, உறக்கமின்றி தொடர்ந்து 40 மணிநேரம் GTA VI காணொளி விளையாட்டை விளையாடி, அதன் பிரதான கதையில் சுமார் 82 வீதத்தை நிறைவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 19ஆம் திகதி GTA VI விளையாட்டு வெளியானதையடுத்து, அதற்கு முன்னதாகவே தனது நேரலை ஒளிபரப்பை ஆரம்பித்த அவர், யூடியூப் மற்றும் Twitch தளங்கள் ஊடாக விளையாடியுள்ளார்.

அவரது முதல் நேரலை ஒளிபரப்பு 23 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் நீடித்ததுடன், ஒரே நேரத்தில் சுமார் 392,500 பேர் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர், அந்த ஒளிபரப்பின் பதிவானது 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் தினமும் 10 முதல் 12 மணிநேரம் வரை மட்டுமே விளையாடத் திட்டமிட்டிருந்த அவர், விளையாட்டின் கதையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

40 மணிநேர விளையாட்டின் முடிவில், சுமார் 82 வீதக் கதை முன்னேற்றத்தை எட்டியிருந்த அவர், முழுமையாக நிறைவு செய்ய மேலும் 12 மணிநேரம் தேவைப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த விளையாட்டை அவசரப்படுத்தாமல் ரசித்து விளையாட விரும்புவதாக முன்னதாகக் கூறியிருந்த IShowSpeed, தற்போது தொடர்ச்சியான 40 மணிநேர விளையாட்டின் மூலம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.