Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

இன்று ஓர் ஒப்பந்தத்திற்கு வந்து பிறகு அது மீறப்பட்டு மீண்டும் போர் ஆரம்பமானால், அத்தகைய ஒப்பந்தத்தினால் என்ன பயன்? – அப்பாஸ் அராக்சி!

தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மட்டும் வொஷிங்டனுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு வர தெஹ்ரான் தயாராக இல்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஒப்பந்தமும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்து வரும் போர் மீண்டும் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரானிய அரசாங்கத்திற்குச் சொந்தமான பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அப்பாஸ் அராக்சி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

“இன்று ஓர் ஒப்பந்தத்திற்கு வந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அது மீறப்பட்டு மீண்டும் போர் ஆரம்பமானால், அத்தகைய ஒப்பந்தத்தினால் என்ன பயன்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக அந்த செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. 

“தற்போதைய சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக மட்டும் எல்லா ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்வது பயனற்றது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.