மத்திய காசாவின் நுசைராத் முகாமில் இன்று காலை இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவல்களோ அல்லது வேறு எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது குறித்த விவரங்களோ இன்னும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரில், ஒக்டோபர் 7, 2023 முதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,700-ஐக் கடந்துள்ளது. மேலும் 176,105 பேர் காயமடைந்துள்ளனர் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 11 அன்று போர் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,975 ஆக உள்ளது. இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட உடல்களின் மொத்த எண்ணிக்கை 850 ஆகும்.




