Tuesday, 17 November 2026
கனடா வானிலை
12°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 8°
  • ஈரப்பதம் 69%
  • காற்று 17 km/h
  • ஸ்காபரோ 12°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 12°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.89 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.69 • 0.00%
  • 1 CAD → INR 65.70 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-17 17:01
அண்மைச் செய்திகள்
ரோசரி மணியால் கண்ணில் அடிபட்ட போப்பாண்டவர், மன்னிப்பு வழங்கினார்! உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்? ‘போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ – இந்திய பிரதமர் வலியுறுத்து ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கசிவுகள் – சுற்றுச்சூழல் அபாயம் குறித்து எச்சரிக்கை ‘ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்’ – கட்டார் அதிகாரி தெரிவிப்பு சிலாபத்தில் கோர விபத்து! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயம் யாழில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய தொல்.திருமாவளவன்! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – அவசர மருத்துவ சிகிச்சை கோரும் இம்ரான் கான்! தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு! மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடி அசத்திய பிரித்தானிய இளவரசர் தம்பதி!
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடக்கம்!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday)’ திரைப்படத்தின் முன்பதிவு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

‘இன்பினிட்டி வார்’ மற்றும் ‘எண்ட்கேம்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளனர்.

அயர்ன் மேன் புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த திரைப்படத்தில் மிரட்டலான ‘டாக்டர் டூம்’ (Doctor Doom)’ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் கிறிஸ் எவன்ஸ், ஷூரி உள்ளிட்ட பல முன்னணி ஹொலிவுட் நடிகர்களும் இணைந்துள்ளனர்.

உலகளவில் இந்த திரைப்படம் டிசம்பர் 18 ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ரசிகர்களின் உற்சாகத்தை கருத்திற்கொண்டு டிசம்பர் 17 ஆம் திகதியே வெளியாகவுள்ளது.

முதற்கட்டமாக ‘இன்பினிட்டி விஷன்’ (Infinity Vision) திரையரங்குகளில் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

அதனைத் தொடர்ந்து மற்ற மல்டிபிளக்ஸ், 2D மற்றும் 3D திரையரங்குகளிலும் முன்பதிவுகள் படிப்படியாகத் தொடங்கப்பட்டு, ரசிகர்கள் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.