Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
இந்திய செய்திகள்

நேபாள பிரதமர் பலேந்திர ஷா நாளை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

நேபாள பிரதமர் பலேந்திர ஷா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (22) இந்தியாவின் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 27ஆம் திகதி பிரதமர் பதவியேற்ற பின்னர், பலேந்திர ஷா மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

36 வயதான நேபாள பிரதமரின் தலைமையில் இடம்பெறும் இந்தப் பயணத்தில் 34 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் குழுவில் நேபாள நிதியமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே, வெளிவிவகார அமைச்சர் ஷிஷிர் கானால் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

இந்த விஜயத்தின்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்திக்கவுள்ள நேபாள பிரதமர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நேபாள பிரதமரைச் சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு, போக்குவரத்துத் தொடர்புகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

மேலும், எரிசக்தித் துறை சார்ந்த பல திட்டங்களைத் திறந்து வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், விண்வெளி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகிய துறைகள் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.