Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

முன்னணி நிறுவனங்களின் 1.6 பில்லியன் வாகனங்கள் மீள அழைப்பு

உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகியவை, சுமார் 1.6 மில்லியன் வாகனங்களை மீள அழைக்கத் தீர்மானித்துள்ளன. 

குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டகட்டா (Takata) வகை காற்றுப்பைகளின் உள்பாகங்களில் வெடிப்பு ஏற்படக்கூடிய அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஹோண்டா நிறுவனம் அமெரிக்காவில் 810,592 வாகனங்களையும், டொயோட்டா நிறுவனம் உலகளவில் சுமார் 790,000 வாகனங்களையும் மீள அழைக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

டொயோட்டா நிறுவனம் மீள அழைக்கவுள்ள வாகனங்களில் 314,000 வாகனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இம்முறை மீள அழைக்கப்படவுள்ள வாகனங்களில் காற்றுப்பைகள் வெடித்த சம்பவங்களோ, அதனால் ஏற்பட்ட விபத்துக்கள் அல்லது காயங்களோ இதுவரை பதிவாகவில்லை என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. 

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மேற்கொண்ட சோதனைகளின்போது, சில காற்றுப்பைகளின் உட்புறப் பாகங்கள் காலப்போக்கில் பலவீனமடையக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால், விபத்துக்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களை மீள அழைக்க இரு நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. 

மீள அழைக்கப்படவுள்ள டொயோட்டா வாகனங்கள்: 

Lexus SC430 (2002–2010) 

Lexus IS250 (2011) 

Lexus GX460 (2017) 

Toyota Corolla (2003–2008) 

Toyota Tundra (2005–2006) 

Toyota Sequoia (2005–2007) 

Toyota 4Runner (2016–2017) 

மீள அழைக்கப்படவுள்ள ஹோண்டா வாகனங்கள்: 

Honda Accord (2013) 

Honda Civic (2012–2013) 

Honda CR-V (2012–2013) 

Acura ILX (2013) 

Acura RDX (2013) 

எவ்வாறாயினும், குறித்த உற்பத்தி ஆண்டுகளைச் சேர்ந்த அனைத்து வாகனங்களும் இந்த மீள அழைப்பில் உள்ளடக்கப்படவில்லை எனவும், குறிப்பிட்ட உற்பத்தித் தொகுதிகளைச் சேர்ந்த வாகனங்கள் மாத்திரமே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், டகட்டா காற்றுப்பைகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2009ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த உயிரிழப்புகளில் குறைந்தது 20 பேர் ஹோண்டா வாகனங்களில் பயணித்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த தசாப்தத்தில் டகட்டா காற்றுப்பைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் மீள அழைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தற்போதைய அபாயத்திற்குத் தீர்வாக, குறித்த வாகனங்களில் காற்றுப்பைகளை விரிவடையச் செய்யும் (Inflator) உபகரணங்களைப் புதியவற்றைக் கொண்டு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்குத் தேவையான புதிய உபகரணங்களை 2027ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் தயாரித்து வழங்க எதிர்பார்ப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.