Saturday, 21 November 2026
கனடா வானிலை
9°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 9 km/h
  • ஸ்காபரோ 10°
  • மார்க்கம் 13°
  • பிரம்டன் 12°
  • மிசிசாகா 10°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 • 0.00%
  • EUR 1.57 • 0.00%
  • GBP 1.88 • 0.00%
  • CHF 1.70 • 0.00%
  • AUD 0.96 • 0.00%
  • 1 CAD → LKR 232.29 • 0.00%
  • 1 CAD → INR 65.17 • 0.00%
  • AED 0.39 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-21 18:44
அண்மைச் செய்திகள்
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி ஒரே ஆண்டில் ரூ.2,593 கோடி நன்கொடை; அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய தமிழர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு; குவிந்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நகைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகள் ஆசிரியை – கொள்ளைச் சம்பவம் போல் நாடகமாடியது அம்பலம்! ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி. மகளின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அர்ஜுன் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?… எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம்…
விளம்பரம்விளம்பரம்
இலங்கை செய்திகள்

GTA VI விளையாட்டைப் பதிவிறக்கம் செய்யும் வேகத்தில் இலங்கைக்கு 114ஆவது இடம்!

GTA VI (Grand Theft Auto VI) காணொளி விளையாட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை மதிப்பிட்ட SpeedGeo ஆய்வில், 146 நாடுகளில் இலங்கை 114ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆய்வின்படி, சுமார் 210 ஜிகாபைட் (GB) அளவுடைய GTA VI விளையாட்டை இலங்கையில் பதிவிறக்கம் செய்வதற்கு 11 மணித்தியாலங்கள் 11 நிமிடங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளாவிய சராசரிப் பதிவிறக்க நேரம் 3 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் லக்சம்பர்க் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அங்கு குறித்த விளையாட்டைப் பதிவிறக்கம் செய்ய வெறும் 53 நிமிடங்களே தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் SpeedGeo பயனர்களால் பதிவுசெய்யப்பட்ட சராசரி நிலையான பிராட்பேண்ட் இணைய வேகத்தின் அடிப்படையிலேயே இந்தக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், இணைய இணைப்பின் வேகம் மற்றும் ஏனைய காரணிகளைப் பொறுத்து உண்மையான பதிவிறக்க நேரம் மாறுபடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.