2026ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமர்சகர்களின் சிறந்த திரைப்படம் பிரிவில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா – அத்தியாயம் 1’ திரைப்படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான விருது அறிவிப்பில் ‘துரந்தர்’ மற்றும் ‘காந்தாரா – அத்தியாயம் 1’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
‘துரந்தர்’ திரைப்படம் சிறந்த திரைப்படப் பிரிவில் விருதைப் பெற்றுள்ள நிலையில், ‘காந்தாரா – அத்தியாயம் 1’ திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை அவற்றின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




