வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்று முதல் சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பையை 3,420 ரூபா சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (2) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.