'இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டிற்கு அதிபராக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய அதிபர் தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது" என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(30) மட்டக்களப்பில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ள நிலையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.