ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை !

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே விதித்துள்ளார்.அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நீதிமன்ற விசாரணையின் போது, ஞானசார தேரர் எட்டு வருடங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்து தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap