முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

Admin
Aug 18,2022

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (வியாழக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந் 2007 ஆம் ஆண்டு தேசிய தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.