தனியார்மயமாகும் மூன்று அரச நிறுவனங்கள்

Admin
Aug 18,2022

மூன்று  அரச நிறுவனங்களை விரைவில் தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

த எகனமிஸ்ட் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி சிறிலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கா டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் தனியார்மயப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழில்சங்கங்கள் பற்றி தமக்கு கவலையில்லை, மக்களே முக்கியம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.