ஹர்த்தாலுக்கு நாடுகடந்த அரசாங்கம் முழுமையான ஆதரவு

Admin
Apr 24,2023

தமிழ்த் தேசியக் கட்சிகள் இனணந்து வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை இரு பிரதான கோரிக்கைகளை முன் நிறுத்தி முழுமையாக தமிழர் தாயகத்தை முடக்கி தமிழர்களின் முழுமையான எதிர்பையும், இனியும் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதனை சர்வதேசத்திற்கும், சிங்களப் பேரினவாதத்தை எச்சரிக்கும் முகமாகவும் நடைபெற உள்ளதால் தாயகமே திரண்டு வெற்றி பெறச் செய்யுமாறு அன்பாகவும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என   நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளர்.

இது தொடர்பில் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், 

பயங்கரவாத எதிப்புச்சட்ட மூலம் என்ற சிங்களப் பேரினவாத அரசின் திட்டத்தை தோற்கடிப்பது, தமிர்களின் மரபுவழித்தாயகமான வடக்கு, கிழக்கில் எமது வரலாற்றுப் பாரம்பரியத்தையும், தொண்மையையும் சிதைக்கும் நோக்குடன் தமிழர்களின் தொண்மையான வழிபாட்டுத் தலங்கள் மீது திட்டமிட்டு நடைபெறும் சிதைப்புகள், தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல் ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளோடு ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழினத்திற்காக செயலாற்றுவதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்பதுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஏனைய தமிழ் தேசிய சக்திகளும் இணைவது காலத்தின் கட்டாயம் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றது.

போராட்டம் வெற்றி பெற அனைவரையும் ஒத்துழைக்குமாறும், பங்கு பற்றுமாறும் அன்புக் கட்டளையாகவும், உரிமையுடனும் மீண்டும் வேண்டுகின்றோம்.-  என தெரிவித்துள்ளது.