சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்தும் ஆதரவு!
Admin
Apr 24,2023
எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவை நாம் வழங்கிவோம் என பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கலுக்கு ஆதரவை தெரிவிக்கும்.
இந்நிலையில் இந்த நிர்வாக முடக்கலை முன்னின்று நடத்தும் அனைத்து கட்சிகள் மற்றும் சங்கங்களுக்கு சிநேகபூரமான நட்பையும், ஆதரவையும் தெரிவிப்போம்.
நாட்டில் வாழும் எமது உறவுகள் அனைவரும் பாகுபாடுமின்றி இந்த நிர்வாக முடக்களில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.