இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள புலம்பெயர்ந்தோர் அலுவலகம்

Admin
Aug 17,2022

இலங்கையில் புலம்பெயர்ந்தோர் அலுவலகம் ஒன்றை  ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோரிடம் இருந்து அரசாங்கம் உதவிகளை எதிர்பார்க்கிறது.இதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்தோர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அண்மையில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.