தேசிய கீதம் மீண்டும் தமிழில்

Admin
Aug 16,2022

இலங்கையின் தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழிலும் பாடுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின விழாவின்போது தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திர தினத்தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தடை ஏற்படுத்தியிருந்தார்.

இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய கீதம், சுதந்திர தின விழாவின் போது சிங்கள் மொழியில் மாத்திரம் பாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.