பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கையிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Admin
Aug 15,2022

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள அவர், பிடிஐக்கு அளித்த சிறப்பு செவ்வியில், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஏராளமான நாடுகளுக்கு இந்தியா அளித்த உதவிக்காக அந்த நாட்டை பொதுநலவாய பொதுச்செயலாளர் பாராட்டியுள்ளார்.

இது சர்வதேச சேவை மற்றும் தலைமையின் சிறப்பான செயல் என்று அவர் விபரித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா இந்த ஆண்டு இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள அதன் தலைவர்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை, இன்னும் தேவைப்படுகிறது என்ற ஸ்கொட்லான்ட் கூறியுள்ளார்.