கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாவற்குழி விகாரைக்கு வருகை தந்த சவேந்திர சில்வா

Admin
Mar 18,2023

முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்நிகழ்விற்கு வருகை தந்த சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த பகுதிகளில் ஏராளமான பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.