ஜெனீவாவில் இன்னுமொரு தீர்மானம்; அமெரிக்கா கொண்டுவருகிறது

Admin
Aug 14,2022

எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானத்தை  சமர்ப்பிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இந்த தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெனிவா தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதோடு, அவை தொடர்பில் செயற்படுவதற்கு நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த புதிய ஜெனிவா தீர்மானத்திற்கு பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.