'தடை நீக்கத்தின் பின்னணியில் இலங்கையின் சுயநலம் தங்கியிருக்கிறது'

Admin
Aug 14,2022

புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் என்பது சிறிலங்காவின் சுயநலம் சார்ந்தது என உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடைநீக்கம் குறித்து அவர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உலகத் தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் கொங்கிரஸ் உட்பட்ட அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டம்பர் மாத அமர்வில் சிறிலங்கா குறித்து முக்கிய நிகழ்ச்சி நிரல் உள்ள நிலையில், அந்த அமர்வை சமாளிப்பதற்காகவும் அதேபோல அனைத்துலக அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான நகர்வுகளின் அடிப்படையிலும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம் பெயர் அமைப்புகளின் முக்கிய தனிநபர்கள் மீதான தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னகர்த்தப்படுவதான தோற்றப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளதான சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் கொங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடை இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.