சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு

Admin
Aug 13,2022

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

இதன்படி, உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

மேலும், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.