வீரமுனை படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்

Admin
Aug 13,2022

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று வீரமுனையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடம் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை நடத்தி வருகின்றோம் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.