வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் 13 என்கிறார் நஸீர் அஹமட்

Admin
Feb 11,2023

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுபான்மை சமூகமான முஸ்லீம்களின் ஒட்டுமொத்த காணிகளையும் ஒரு நிர்வாக பயங்கரவாதத்தின் ஊடாக தமிழர்கள் பறித்து வைத்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த 13வது திருத்ததிற்கு பின்பு தான் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியெற்றப்பட்டிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே 13வது திருத்தச்சட்டம் சரியான முறையில் அமுல்ப்படுத்தப்படும் போது அனைத்து இனங்களின் உரிமைகளும் சரியாக மதிக்கப்பட்டு அது தீர்க்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மிகமுக்கியமாக முஸ்லீம்களின் காணிப்பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களின் காணிகளை நிர்வாக பயங்கரவாத்தின் ஊடாக பறித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.